மரத்தில் மோதி விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர் பலி

சோழவந்தான் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர் மரத்தில் மோதியதால் பரிதாபமாக இறந்தார்.
மரத்தில் மோதி விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர் பலி
Published on

சோழவந்தான்,

சோழவந்தான் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் சுபாஷ் (வயது 20). இவர் திருமங்கலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று சுபாஷ் சமயநல்லூரில் உள்ள உறவினரை பார்க்க மோட்டார் சைக்கிளில் ஆனைக்குளம் வழியாக அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது.

இதில் சுபாஷ் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார், பலியான மாணவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com