குடியிருப்புகள் அகற்றப்படுவதை கண்டித்து கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டம்

குடியிருப்புகள் அகற்றப்படுவதை கண்டித்து கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டம்
குடியிருப்புகள் அகற்றப்படுவதை கண்டித்து கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டம்
Published on

பூந்தமல்லி,

பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடி மூன்று சாலை சந்திப்பில் தனியாருக்கு சொந்தமான தியேட்டர் உள்ளது. இதனை சுற்றிலும் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகள் உள்ளன. இந்த நிலையில் இந்த கட்டிடங்கள் அனைத்தும் உரிய அனுமதி இன்றி இருப்பதாகவும் அந்த கட்டிடங்களை இடித்து நிலத்தை மீட்க வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர் தொடர்ந்த வழக்கில் கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டதாகவும், பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் சார்பில் இன்று (புதன்கிழமை) அந்த கட்டிடங்கள் அனைத்தையும் இடிக்கப்போவதாக உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளது.

இதனை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் ஷேக்தாவூத் தலைமையில் அந்த பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் நேற்று கடைகளை அடைத்து குமணன்சாவடி பஸ் நிறுத்தம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வக்கீல்கள் அணி மாநில செயலாளர் ஜெய்னுலாப்தீன், ஆருன்ரசீத் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com