

திருவெறும்பூர்,ஏப்.17-
திருவெறும்பூர் அருகே உள்ள வடக்கு காட்டூர் இந்திரா நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் நகுலன் (வயது 56). இவரது வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பதாக திருவெறும்பூர் போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் திருவெறும்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் அந்த வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு 20 மூட்டைகளில் புகையிலை பொருட்கள்பதுக்கிவைத்துஇருந்ததுகண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் அவைகளை பறிமுதல் செய்து நகுலனை கைது செய்தனர்.