மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த 600 சாராய பாட்டில்கள் பறிமுதல்; ஒருவர் கைது

மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த 600 சாராய பாட்டில்கள் பறிமுதல்; ஒருவர் கைது.
மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த 600 சாராய பாட்டில்கள் பறிமுதல்; ஒருவர் கைது
Published on

குத்தாலம்,

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட அரசூர் என்ற இடத்தில் சாராயம் கடத்தி வரப்படுவதாக பெரம்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த பெரம்பூர் போலீசார் அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்தனர். அதில் 180 மில்லி அளவுடைய 600 சாராய பாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சாராய பாட்டில்களை பறிமுதல் செய்தனர். சாராயத்தை கடத்தி வந்த கோடங்குடி சோலையாம்பட்டினம் பகுதியை சேர்ந்த ஜெயகாந்தன் (வயது 40) என்பவரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய கோடங்குடி துரைக்கண்ணு மகன் நடராஜன் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com