பந்தய புறா வளர்ப்பதில் மோதல்; கட்டிட தொழிலாளி குத்திக்கொலை

பந்தய புறா வளர்ப்பதில் மோதலில் கட்டிட தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்டார்.
பந்தய புறா வளர்ப்பதில் மோதல்; கட்டிட தொழிலாளி குத்திக்கொலை
Published on

சென்னை ராஜா அண்ணாமலைபுரம், குட்டி கிராமணி தோட்டம் பகுதியைச்சேர்ந்தவர் சதீஷ் (வயது 34). கட்டிட தொழிலாளி. இவருக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் இவரது உறவினர் ரஞ்சித் (20) பந்தைய புறாக்கள் வளர்த்து வந்தார். புறாக்கள் வளர்ப்பது தொடர்பாக சதீசுக்கும், ரஞ்சித்துக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டது. இது அவர்களுக்குள் முன் விரோதத்தை ஏற்படுத்தியது.இந்த விரோதத்தில் நேற்று முன்தினம் இரவு ரஞ்சித், அவரது நண்பர் ஹரிகரனுடன் சேர்ந்து, சதீசை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். படுகாயம் அடைந்த சதீஷ், ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்து போனார்.

இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சுப்பிரமணியன் மேற்பார்வையில் அபிராமபுரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். தப்பி ஓடிய ரஞ்சித், ஹரிகரன் இருவரும் கைது செய்யப்பட்டனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com