கட்டிட தொழிலாளி தற்கொலை

சுரண்டை அருகே கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கட்டிட தொழிலாளி தற்கொலை
Published on

சுரண்டை:

சுரண்டை சிவகுருநாதபுரம் திருமலையாண்டவர் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகவேல் மகன் பூபதி ராஜா (வயது21). கட்டிட தொழிலாளி. இவருக்கு மதுப்பழக்கம் உண்டு. இதனை அவரது தாய் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால், தாய்க்கும் மகனுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக வீட்டிற்கு பணம் ஏதும் கொடுக்காமல் அதிகமாக குடித்ததாக தெரிகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தாயுடன் சண்டை போட்டு வீட்டு மாடியில் பூபதி ராஜா தூங்க சென்றுள்ளார். நேற்று காலை மாடிக்கு சென்று பார்த்தபோது பூபதிராஜா தூக்கில் பிணமாக தொங்கினார். தகவல் அறிந்ததும் சுரண்டை போலீசார் போலீசார் சென்று பூபதிராஜா உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com