தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி சாவு

தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி சாவு
Published on

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 22) மற்றும் அவரது நண்பர் சந்துரு (24). கட்டிட தொழிலாளிகளான இருவரும் கடந்த 15 நாட்களாக தாம்பரத்தை அடுத்த பதுவஞ்சேரி, கரிகாலன் தெருவில் உள்ள வீடு ஒன்றில் நடைபெற்று வரும் கட்டிட பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கட்டிடத்துக்கு தூண் அமைப்பதற்காக பள்ளம் தோண்டிக் கொண்டிருந்த போது, கீழே சென்ற மின்சார வயர் பாண்டியன் மீது உரசியதில் மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்ட நிலையில் அய்யோ அம்மா என அலறினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர் சந்துரு பாண்டியனை காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் அவரும் தூக்கி வீசப்பட்டார்.

இதில் பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிறிய காயங்களுடன் சந்துரு அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சேலையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தொழிலாளியின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com