

புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 280 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் 104 பேர் குணமடைந்தார். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 33 ஆயிரத்து 74 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 783 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 423 ஆக உள்ளது.