நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி சாவு எண்ணிக்கை 513 ஆக அதிகரிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி சாவு எண்ணிக்கை 513 ஆக அதிகரிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி சாவு எண்ணிக்கை 513 ஆக அதிகரிப்பு
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலியாகினர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 513 ஆக அதிகரித்து உள்ளது.

2 பேர் பலி

நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 511 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று திருசசெங்கோடு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 89 வயது முதியவர் மற்றும் நாமக்கல் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 82 வயது முதியவர் என 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதுவரை கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 513 ஆக அதிகரித்து உள்ளது.

மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 53,839 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே நேற்று புதிதாக 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்து 877 ஆக அதிகரித்து உள்ளது.

457 பேருக்கு சிகிச்சை

இந்த நிலையில் நேற்று 43 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இம்மாவட்டத்தில் இதுவரை 52,907 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 457 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com