ஈரோட்டில் தேவையின்றி வாகனங்களில் சுற்றியவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை- போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை நேரில் ஆய்வு

ஈரோட்டில் தேவையின்றி வாகனங்களில் சுற்றியவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்து அனுப்பினார்கள். போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை இதை நேரில் ஆய்வு செய்தார்.
ஈரோட்டில் தேவையின்றி வாகனங்களில் சுற்றியவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை- போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை நேரில் ஆய்வு
Published on

ஈரோடு

ஈரோட்டில் தேவையின்றி வாகனங்களில் சுற்றியவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்து அனுப்பினார்கள். போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை இதை நேரில் ஆய்வு செய்தார்.

கொரோனா தொற்று

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுக்க அமைச்சர் சு.முத்துசாமி, மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை ஆகியோர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதியை ஏற்படுத்தி கொடுக்க அது சார்ந்த துறையினர் அன்றாடம் பாடுபட்டு வருகிறார்கள்.

கொரோனா பாதித்த பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் தினசரி சுத்தம் செய்து கிருமி நாசினி தெளித்து வருகிறார்கள். இனிமேல் யாருக்கும் தொற்று வந்துவிடக்கூடாது என்று போலீசார் தொடர் பாதுகாப்பு பணி மற்றும் விழிப்புணர்வு பணியில் உள்ளனர். ஆனால், இவை எதைப்பற்றியும் கவலைப்படாமல் சிலர் வாகனங்களில் ஊர் சுற்றுவது வாடிக்கையாக உள்ளது.

போலீசார் விசாரணை

மளிகை வாங்க போகிறேன், காய்கறி வாங்க போகிறேன், மருந்து வாங்க போகிறேன் என்று வீட்டை விட்டு வெளியே வந்து சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இதனால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகளில் அதிக கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. கடைக்காரர்கள் அபராதம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். தொடர்ந்து சில நாட்கள் வியாபாரம் செய்ய முடியாத அளவுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையும் உள்ளது.

இது ஒருபுறம் இருந்தாலும் தேவையில்லாமல் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதால் தனி மனித இடைளெயை கடைபிடிக்க முடிவதில்லை. இதனால் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. எனவே அதை தடுக்க நேற்று ஈரோடு மாநகர் பகுதியில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் இருந்தனர். ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா, ரவுண்டானா, சுவஸ்திக் கார்னர், காளைமாடு சிலை உள்ளிட்ட பகுதிகளில் சென்ற அனைத்து வாகனங்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். இ-பதிவு இல்லாத வாகனங்களுக்கும், உரிய காரணமின்றி சுற்றிக்கெண்டு இருந்தவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைகளை ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வாகனங்களில் தேவையின்றி சுற்றிய வாலிபர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com