

சேலம்
சேலம் மாவட்டத்தில் நேற்று புதிதாக 27 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் 10 பேர், தலைவாசலில் 4 பேர், வீரபாண்டியில் 3 பேர், ஆத்தூரில் 2 பேர், கெங்கவல்லி, ஓமலூர், சங்ககிரி, வாழப்பாடி ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுதவிர, சேலம் மாவட்டத்திற்கு நாமக்கல் மற்றும் ஈரோட்டில் இருந்து வந்த தலா 2 பேரும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 340 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 38 பேர் குணமடைந்துவிட்டதால் நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தொடர்ந்து 395 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சேலம் மாவட்டத்தை சேர்ந்த 48 வயதான பெண் ஒருவர் கொரோனா பாதிப்பால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,725 ஆக உயர்ந்துள்ளது.