கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 47 பேருக்கு கொரோனா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 47 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 47 பேருக்கு கொரோனா
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 12 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்து 593 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சையில் குணமடைந்து 8 ஆயிரத்து 245 பேர் வீடு திரும்பி உள்ளனர். தற்போது 229 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் கொரானாவுக்கு 119 பேர் இறந்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com