புதிதாக 7 பேருக்கு கொரோனா

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 212 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக 7 பேருக்கு கொரோனா
Published on

மதுரை,

மதுரையில் நேற்று புதிதாக 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 4 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 212 ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில் மதுரையில் நேற்று 8 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் 6 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 697 ஆக அதிகரித்துள்ளது. இவர்களை தவிர 55 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். இதுபோல், மதுரையில் இதுவரை 460 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com