சேலம் மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு

சேலம் மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சேலம்,

சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 17 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 10 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஆத்தூரில் 3 பேர், தலைவாசலில் 2 பேர், சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதி, ஓமலூர், நங்கவள்ளி, பனமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

மேலும் கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 457 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 19 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com