

தென்காசி, மே:
தென்காசி மாவட்டத்தில் நேற்று மேலும் 452 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் சேர்த்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 11-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 14 ஆயிரத்து 466 பேர் குணமடைந்துள்ளனர். 3 ஆயிரத்து 296 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதவிர தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 55 வயது பெண், 68 வயது முதியவர் மற்றும் நெல்லை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 76 வயது முதியவர் என மொத்தம் 3 பேர் பலியானார்கள். இதனால் பலியானோர் எண்ணிக்கை 249-ஆக உயர்ந்துள்ளது.