கர்நாடகத்தில் கொரோனா உயிரிழப்பு 37 ஆயிரத்தை நெருங்குகிறது

கர்நாடகத்தில் கொரோனா உயிரிழப்பு 37 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
கர்நாடகத்தில் கொரோனா உயிரிழப்பு 37 ஆயிரத்தை நெருங்குகிறது
Published on

பெங்களூரு:

கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 989 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 1,632 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதுவரை 29 லட்சத்து 28 ஆயிரத்து 33 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 25 பேர் கொரோனாவுக்கு இறந்தனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 958 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று 1,612 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை 28 லட்சத்து 68 லட்சத்து 351 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். 22 ஆயிரத்து 698 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

தட்சிண கன்னடாவில் 411 பேர், பெங்களூரு நகரில் 377 பேர், உடுப்பியில் 169 பேர், மைசூருவில் 92 பேர் உள்பட 28 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு பதிவாகி இருந்தது. 2 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. தட்சிண கன்னடாவில் 7 பேர், சித்ரதுர்கா, ஹாசனில் தலா 3 பேர் உள்பட 25 பேர் இறந்தனர். 18 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை.

இவ்வாறு சுகாதாரத்துறை கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com