செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,154 பேர் பாதிப்பு - 33 பேர் உயிரிழப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,154 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் சிகிச்சைப் பலனின்றி ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,154 பேர் பாதிப்பு - 33 பேர் உயிரிழப்பு
Published on

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கோவிந்தராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (வயது 37). இவர் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் ஊழியராக பணிபுரிந்த நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இவருடன் சேர்த்து நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 154 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 15 ஆயிரத்து 595 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் 99 ஆயிரத்து 426 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சைப் பலனின்றி ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,263 ஆக உயர்ந்தது. இதில் 14 ஆயிரத்து 906 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 1,241 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51 ஆயிரத்து 848 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 45 ஆயிரத்து 5 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

நேற்று சிகிச்சைப் பலனின்றி 12 பேர் உயிரிழந்தனர். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 724 உயர்ந்துள்ளது. 6 ஆயிரத்து 119 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com