செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 10 பேர் உயிரிழப்பு; 364 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 364 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 53 ஆயிரத்து 95-ஆக உயர்ந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 10 பேர் உயிரிழப்பு; 364 பேர் பாதிப்பு
Published on

இவர்களில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 337 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,285-ஆக உயர்ந்தது. இதில் 2473 பேர்

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 152 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68 ஆயிரத்து 929 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் 66 ஆயிரத்து 562 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்தனர். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1135- ஆக உயர்ந்துள்ளது. 1232 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com