கலவை போலீஸ் நிலையத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

கலவை போலீஸ் நிலையத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
கலவை போலீஸ் நிலையத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
Published on

கலவை

கலவை போலீஸ் நிலையத்தில் நேற்று காலை கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து கடை உரிமையாளர்கள், ஆட்டோ, வேன் டிரைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய இன்ஸ்பெக்டர் கடை உரிமையாளர்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும், கடைக்கு வருபவர்களுக்கு முக கவசம் கொடுக்க வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இல்லையென்றால் கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்டோவில் இருவருக்கு மேல் பயணிகளை ஏற்றக்கூடாது, மீறும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com