கீழ்வேளூர் அருகே கொரோனா தடுப்பூசி முகாம்

கீழ்வேளூர் அருகே கொரோனா தடுப்பூசி முகாம்.
கீழ்வேளூர் அருகே கொரோனா தடுப்பூசி முகாம்
Published on

சிக்கல்,

கீழ்வேளூர் அருகே இலுப்பூர் சத்திரத்தில் கொரானா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமிற்கு நாகை ஊரக வளர்ச்சி துறை உதவி திட்ட அலுவலர் குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனா, தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் இலுப்பூர், பட்டமங்கலம், வடக்காலத்தூர் பகுதிகளை சேர்ந்த 45 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் தேவூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பிரபு, செவிலியர் மல்லிகா. மருந்தாளுனர் காஞ்சனா, சுகாதாரத்துறை பணியாளர்கள், துணை. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபால் வேதாரண்யம் நகராட்சி பகுதியில் வணிக நிறுவனங்கள் வைத்துள்ளவர்களுக்கு நகராட்சியும், வர்த்தக சங்கமும் இணைந்து கொரோனா தடுப்பூசி முகாமை நடத்தியது. வர்த்தக சங்க கட்டிடத்தில் நடைபெற்ற முகாமை வேதாரண்யம் வர்த்தக சங்க தலைவர் தென்னரசு தொடங்கி வைத்தார். முகாமில் நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, ஆய்வாளர் வெங்கடாசலம், டாக்டர்கள் ராஜசேகர், சுந்தர்ராஜன் சுகாதார ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com