30 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டு தயார்

வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் 30 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டு தயார் நிலையில் உள்ளது.
30 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டு தயார்
Published on

வத்திராயிருப்பு,

நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அரசு தலைமை மருத்துவமனையில் 30 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதுகுறித்து தலைமை மருத்துவர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

கொரோனா நோய் தொற்றின் காரணமாக நமது பகுதியில் சிகிச்சை அளிப்பதற்காக தனியார் கல்லூரியில் படுக்கைகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைப்போல் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் 30 படுக்கைகள் அமைக்கப்பட்டு கொரோனா வார்டு தயார்நிலையில் உள்ளது. இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டு உள்ளது. போதுமான அளவு ஆக்சிஜன் இருப்பு மருத்துவமனையில் உள்ளதால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு தடையின்றி சிகிச்சை அளிக்க போதிய வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com