ஊழல் குற்றச்சாட்டு: சார்-பதிவாளர் மீதான விசாரணையை நேர்மையாக நடத்த வேண்டும்; ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை வில்லிவாக்கம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில், கணக்கில் வராத பணம் ரூ.70 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, அங்கு பணியாற்றிய சார்-பதிவாளர் தூத்துக்குடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
ஊழல் குற்றச்சாட்டு: சார்-பதிவாளர் மீதான விசாரணையை நேர்மையாக நடத்த வேண்டும்; ஐகோர்ட்டு உத்தரவு
Published on

ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அவர், மீண்டும் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, கருப்பு எழுத்து இயக்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல், ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், சம்பந்தப்பட்ட சார்-பதிவாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து அரசிடம் கேட்டு தெரிவிப்பதாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து நீதிபதிகள், ஊழல் குற்றச்சாட்டு குறித்த புலன் விசாரணையை நேர்மையாக நடத்த வேண்டும். புலன் விசாரணை நிலை குறித்தும், ஒழுங்கு நடவடிக்கை குறித்தும் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்றும் உத்தரவிட்டு விசாரணையை 6 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com