கொங்கணாபுரத்தில் ரூ.17½ லட்சத்துக்கு பருத்தி ஏலம்

கொங்கணாபுரத்தில் ரூ.17½ லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடந்தது.
கொங்கணாபுரத்தில் ரூ.17½ லட்சத்துக்கு பருத்தி ஏலம்
Published on
Updated on

எடப்பாடி,

கொங்கணாபுரத்தில் இயங்கி வரும் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பருத்தி ஏலம் நடைபெறும். அந்தவகையில் நேற்று நடந்த ஏலத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர். தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் பருத்தி வரத்து குறைவாகவே காணப்பட்டது. மொத்தம் 700 பருத்தி மூட்டைகள் 225 லாட்டுகளாக அடுக்கி வைக்கப்பட்டு ஏலம் நடைபெற்றது. இதில் பி.டி. ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.9 ஆயிரத்து 135 வரையும், டி.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9 ஆயிரத்து 760 முதல் ரூ.13 ஆயிரத்து 699 வரை விற்பனை ஆனது. நேற்று நடந்த ஏலத்தில் மொத்தம் ரூ.17 லட்சத்துக்கு பருத்தி விற்பனை ஆனது.

X

Daily Thanthi
www.dailythanthi.com