கொங்கணாபுரத்தில் ரூ.1½ கோடிக்கு பருத்தி ஏலம்

கொங்கணாபுரத்தில் ரூ.1½ கோடிக்கு பருத்தி ஏலம் நடந்தது.
கொங்கணாபுரத்தில் ரூ.1½ கோடிக்கு பருத்தி ஏலம்
Published on

எடப்பாடி,

கொங்கணாபுரத்தில் இயங்கிவரும் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர். ஏலத்தில் மொத்தம் 4 ஆயிரம் மூட்டைகள் 1,100 லாட்டுகளாக வைக்கப்பட்டு இருந்தது. மொத்தம் ரூ.1 கோடியே 50 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் ஏலம் போனது. இதில் பி.டி. ரக பருத்தி குவிண்டால் ரூ.9 ஆயிரத்து 89 முதல் ரூ.12 ஆயிரத்து 850 வரையும், டி.சி.எச்.. ரக பருத்தி குவிண்டால் ரூ.9 ஆயிரத்து 600 முதல் ரூ.13 ஆயிரத்து 369 வரை விற்பனையானது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com