

எடப்பாடி:
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தி விற்பனையாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் கொங்கணாபுரம் கிளை பருத்தி ஏல மையத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. சேலம், மேட்டூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தி மூட்டைகளை கொண்டு வந்து ஏலத்தில் கலந்து கொண்டனர். மொத்தம் 1,300 மூட்டை பருத்தி, ரூ.30 லட்சத்துக்கு ஏலம் போனது.
இதில் டி.டி.எச். ரக பருத்தி குவிண்டால் (100 கிலா) ஒன்று ரூ.7 ஆயிரத்து 550 முதல் ரூ.9 ஆயிரத்து 90 வரை ஏலம் போனது. பி.டி. ரக பருத்தி குவிண்டால் ஒன்று ரூ.6 ஆயிரத்து 690 முதல் ரூ.7 ஆயிரத்து 819 வரை ஏலம் போனது. இந்த ஏலத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை பகுதியில் உள்ள வியாபாரிகள் பலர் கலந்து கொண்டு பருத்தியை ஏலம் எடுத்தனர்.