கொங்கணாபுரத்தில் ரூ.8¾ லட்சத்திற்கு பருத்தி ஏலம்

கொங்கணாபுரத்தில் ரூ.8¾ லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.
கொங்கணாபுரத்தில் ரூ.8¾ லட்சத்திற்கு பருத்தி ஏலம்
Published on

எடப்பாடி:

கொங்கணாபுரத்தில் ரூ.8 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.

பருத்தி ஏலம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தி விற்பனையாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் கொங்கணாபுரம் கிளை பருத்தி ஏல மையத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற இருந்த பருத்தி ஏலம் மே.1-ந் தேதி உழைப்பாளர் தின விடுமுறையை முன்னிட்டு முன்னதாக நேற்று நடைபெற்றது.

இந்த ஏலத்தில் சேலம், மேட்டூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தி மூட்டைகளை கொண்டு வந்து ஏலத்தில் கலந்து கொண்டனர். மொத்தம் 450 பருத்தி மூட்டைகள், ரூ.8 லட்சத்திற்கு ஏலம் சென்றது.

வியாபாரிகள்

டி.டி.ஹெச். ரக பருத்தி மூட்டைகள் குவிண்டால் ரூ.7,500 முதல் ரூ.9,090 வரை ஏலம் போனது. பி.டி. ரக பருத்தி மூட்டைகள் குவிண்டால் ரூ.6,250 முதல் ரூ. 7,070 வரை ஏலம் போனது. சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட பல பகுதியில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டு பருத்தி மூட்டைகளை வாங்கி சென்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com