கோர்ட்டில் வேலை

விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர், கணினி ஆபரேட்டர் உள்ளிட்ட 71 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கோர்ட்டில் வேலை
Published on: 

எஸ்.எஸ்.எல்.சி. படித்தவர்கள், 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டப்படிப்பு படித்தவர்கள், பி.ஏ., பிஎஸ்.சி., பி.காம் படிப்புடன், கம்ப்யூட்டர் அப்ளிகேசன் டிப்ளமோ படித்தவர் களுக்கு பணிகள் உள்ளன.

35 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி, தேவையான சான்றுகளுடன் விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் சென்றடைய கடைசி நாள் 15-5-2017-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.ecourts.gov.in/tn/villupuram என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com