சமூக இடைவெளியை மறந்து ஓசூர் கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

ஓசூர் கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்
சமூக இடைவெளியை மறந்து ஓசூர் கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்
Published on

ஓசூர்:

ஓசூரில் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. அரசு அறிவித்தபடி காலை 6 மணி முதல் 10 வரை கடைகள், பலசரக்கு கடைகள் உள்ளிட்டவை இயங்கி காலை 10 மணிக்கு மேல் முழுமையாக அடைக்கப்படுகின்றன. அதேபோல் டீக்கடைகள், நடைபாதை கடைகள், பழக்கடைகள் உள்ளிட்ட மற்றவை திறக்கப்படுவதேயில்லை. இவ்வாறாக, அரசின் நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டுவரும் நிலையில், கடைவீதிகள், சாலைகளில் மக்கள் கூட்டம் குறைந்தபாடில்லை. நேற்று காலை 9.30 மணியளவில், ஓசூர் பாகலூர் சாலை, எம்.ஜி.ரோடு, தாலுகா அலுவலக சாலை ஆகிய பகுதிகளில் சமூக இடைவெளியை மறந்து இருசக்கர வாகனங்களில் ஏராளமானோர் சென்றனர். இதை பார்த்த பொதுமக்கள் வேதனை அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com