கடலூர்: பெண்ணின் முகத்தை துணியால் மூடி 6 சவரன் நகை பறிப்பு

கடலூர் மாவட்டம், வாகையூர் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர், காலையில் அதே பகுதியில் உள்ள தனது மக்காச்சோள வயலுக்கு சென்றார்.
கடலூர்: பெண்ணின் முகத்தை துணியால் மூடி 6 சவரன் நகை பறிப்பு
Published on

கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே உள்ள வாகையூர் கிராமத்தை சேர்ந்தவர் பூங்கோதை (வயது 51). இவர் நேற்று காலை அதே பகுதியில் உள்ள தனது மக்காச்சோள வயலுக்கு சென்றார்.

அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென பூங்கோதையின் முகத்தில் துணியை போட்டு இறுக்கமாக பிடித்துக் கொண்டார்.

பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் நகையை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

பறிபோன நகையின் மதிப்பு ரூ.6 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com