படப்பை அருகே வாலிபருக்கு வெட்டு

படப்பை அருகே வாலிபரை கத்தியால் வெட்டிய நண்பரை போலீசார் கைது செய்தனர்.
படப்பை அருகே வாலிபருக்கு வெட்டு
Published on

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சிறுமாத்தூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பூபாலன் என்கிற மணவாளன் (வயது 33) இவருடைய நண்பர்கள் படப்பை பெரியார் நகர் பகுதியை சேர்ந்த கார்த்திக், மணிமங்கலம் காந்திநகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணா, படப்பை பெரியார் நகர் பகுதியை சேர்ந்த பிரசாத்ந். நண்பர்களான இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் சிறுமாத்தூர் பகுதியில் மது குடித்துள்ளனர்.

அப்போது மணவாளன், கார்த்திக்கை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த கார்த்தி, பிரசாந்திடம் இருந்த கத்தியை வாங்கி மணவாளனை கையில் வெட்டியுள்ளார். இது குறித்து மணிமங்கலம் போலீசில் மணவாளனின் சகோதரர் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் கிருஷ்ணா (30) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்த வழக்கில் கார்த்திக், பிரசாந்த் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com