

சாத்தூர்,
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் முருகன் காலனியை சேர்ந்தவர் சந்திராதேவி (வயது 23). சிவகாசி விஸ்வநத்தத்தை சேர்ந்தவர் கரோலின் எஸ்தர் (23). இவர்கள் இருவரும் சாத்தூரில் உள்ள கூட்டுறவு மேலாண்மை கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் வந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கல்லூரி முடிந்து வீட்டுக்கு திரும்பியபோது சாத்தூர்-சிவகாசி சாலையில் தனியார் பள்ளி அருகில் அதே வழியில் பின்னால் வந்த பள்ளிக்கூட பஸ், இருசக்கர வாகனம் மீது மோதியதில் இருவரும் கீழே விழுந்தனர். இதில் சந்திராதேவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கரோலின்எஸ்தர் பலத்த காயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கரோலின் எஸ்தர் அளித்த புகாரின் பேரில் சாத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.