ரெயிலில் அடிபட்டு முதியவர் பலி

ரெயிலில் அடிபட்டு முதியவர் பலியானார்
ரெயிலில் அடிபட்டு முதியவர் பலி
Published on

காரைக்குடி,

காரைக்குடியை அடுத்த கோட்டையூர் ஸ்ரீராம்நகர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு முதியவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காரைக்குடி ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜராஜன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தார். விசாரணையில் இறந்த நபர் காரைக்குடி டி.டி. நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜரெத்தினம் (வயது 69) என்றும் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com