கிணற்றில் மூதாட்டி பிணம்

தளவாய்புரம் அருக கிணற்றில் கிடந்த மூதாட்டி உடலை மீட்டனர்.
கிணற்றில் மூதாட்டி பிணம்
Published on

தளவாய்புரம்,

தளவாய்புரம் அருகே புத்தூர் பெரிய சாலியன் குளம் கம்மா கரை அருகே உள்ள ஒரு கிணற்றில் அடையாளம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் ஒன்று மிதந்தது. இதுபற்றி தளவாய்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆம்புலன்ஸ் வரவழைத்து மூதாட்டியின் உடலை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்த மூதாட்டி யார்? எப்படி இறந்தார்? என்பது பற்றி தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com