

விருதுநகர்,
காரியாபட்டி அருகே உள்ள டி.செட்டிகுளம் பஞ்சாயத்து செயலர் கருணாநிதி (வயது 40). இவர் நேற்று உடுப்பகுளத்தை சேர்ந்த தனுஷ்கோடி (62) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கலெக்டர் அலுவலகம் வந்தார். இவர்கள் மதுரை ரோட்டில் உள்ள மேம்பாலத்தில் வந்த போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி தடுப்பு சுவரில் மோதியதில் இருவரும் கீழே விழுந்தனர். இதில் கருணாநிதி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த தனுஷ்கோடி தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து இந்நகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.