விஷம் குடித்த விவசாயி சாவு

கொரடாச்சேரி அருகே விஷம் குடித்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.
விஷம் குடித்த விவசாயி சாவு
Published on

கொரடாச்சேரி:

கொரடாச்சேரி அம்மையப்பனை அடுத்த அக்கரை புதுத்தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 64). விவசாயி. இவருடைய 2 மகன்களில் ஒருவர் விஷம் குடித்து இறந்து விட்டார். மற்றொருவர் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நடராஜன் வீட்டில் யாரும் இல்லாதபோது பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டார். இதனால் மயங்கி கிடந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜன் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக இவருடைய உறவினர் கபீர்தாஸ் கொடுத்த புகாரின்பேரில் கொரடாச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com