அரியலூர் ரெயில் நிலையத்தில் குவிந்த பக்தர்கள்

ஊருக்கு திரும்புவதற்காக அரியலூர் ரெயில் நிலையத்தில் குவிந்த பக்தர்கள் குவிந்தனர்.
அரியலூர் ரெயில் நிலையத்தில் குவிந்த பக்தர்கள்
Published on

தாமரைக்குளம்:

அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சியில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பஸ்கள், வேன்கள், ரெயில்கள் மூலம் வந்து, தேரோட்டத்தில் பங்கேற்றனர். பின்னர் அவர்கள் ஊருக்கு திரும்பினர். இதில் பக்தர்கள் பலர் தங்கள் சொந்த ஊருக்கு ரெயிலில் செல்வதற்காக அரியலூர் ரெயில் நிலையத்தில் குவிந்தனர். அவர்கள் பயணச்சீட்டு வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதையொட்டி அரியலூர் ரயில் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, வரிசையில் நின்றவர்களை ஒழுங்குபடுத்தினர். இதையடுத்து பக்தர்கள் பயணச்சீட்டை பெற்று, ரெயில் மூலம் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இதனால் அரியலூர் ரெயில் நிலைய சாலையில் பயணிகள் கூட்டமாக காணப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com