முதல்-அமைச்சராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்

முதல்-அமைச்சராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று தஞ்சை வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதல்-அமைச்சராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்
Published on

கும்பகோணம்,

செயல்வீரர்கள் கூட்டம்

தஞ்சை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் நேற்று கும்பகோணத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் ஜோதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எம்.ரெங்கசாமி எம்.எல்.ஏ., வேளாண்மைத்துறை அமைச்சர் ரா.துரைக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கும்பகோணம் நகர செயலாளர் ராம.ராமநாதன் வரவேற்றார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தவமணி, எம்.ராம்குமார், இளமதி சுப்ரமணியன், முன்னாள் நகரசபை தலைவர் ரத்னாசேகர், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் தம்பி.தேவரத்தினம், மணலூர் க.சுந்தர்ராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் ஆர்.எஸ்.செல்வராஜ், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பேரவை செயலாளர் தயாளன் உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடைய 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

தீர்மானங்கள்

1 கோடி தொண்டர்களின் வற்புறுத்தலை ஏற்று அ.தி.மு.க.வை காக்க, வழிநடத்திட பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற சசிகலாவுக்கு நன்றி மற்றும் வாழ்த்துகளை தெரிவிப்பது. அ.தி.மு.க.வின் நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை பொதுச்செயலாளரின் வழிகாட்டுதலின் பேரில் ஆண்டு முழுவதும் கொண்டாடும் வகையில் பொதுக்கூட்டம் நடத்துவது, மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரைப்போட்டி, பேச்சுப் போட்டி உள்ளிட்ட போட்டிகளை நடத்தி வெற்றிபெற்றவர்களுக்கு பொதுச்செயலாளர் சசிகலாவின் கையால் பரிசு வழங்குவது, ஒவ்வொரு கிளையிலும் அ.தி.மு.க. கொடியை ஏற்றி சிறப்பாக கொண்டாடுவது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண தொகையை அறிவித்த தமிழக அரசை பாராட்டுவது, சட்டத்தை மதிக்காமல் தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீர் கொடுக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டிப்பது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் கும்பகோணம் ஒன்றிய செயலாளர் சோழபுரம் க.அறிவழகன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com