

ஈரோடு,
ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. மற்றும் மக்கள் சேவை மையம் சார்பில், கருங்கல்பாளையம் 39-வது வார்டுக்கு உட்பட்ட மரப்பாலம், வீரப்பவீதி, அரசிளங்கோ வீதி, குமணன் வீதி, ஆறுமுகபிள்ளை சந்து, வையாபுரி சந்து, மதுரைவீரன் கோவில் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மக்கள் சேவை மைய நிர்வாகியும், தி.மு.க. பிரமுகருமான கேபிள் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். சுமார் 3 ஆயிரம் குடும்பத்தினருக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, மசாலா பொருட்கள், முகக்கவசம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
இதில் முன்னாள் எம்.பி. கந்தசாமி, கொள்கை பரப்பு இணைச்செயலாளர் சந்திரகுமார், மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி, மாநகர செயலாளர் சுப்பிரமணி, பகுதி செயலாளர் குறிஞ்சி தண்டபாணி, நிர்வாகி குறிஞ்சி சிவக்குமார், வார்டு செயலாளர் ஆறுமுகம், சந்திரசேகர், சுரேஷ்குமார், சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். இதற்கான ஏற்பாடுகளை தி.மு.க. பிரமுகரும், மக்கள் சேவை மைய நிர்வாகியுமான கேபிள் செந்தில்குமார் செய்திருந்தார்.