மது குடிப்பதை தந்தை கண்டித்ததால் மாநகராட்சி துப்புரவு தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

மது குடிப்பதை தந்தை கண்டித்ததால் மாநகராட்சி துப்புரவு தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
மது குடிப்பதை தந்தை கண்டித்ததால் மாநகராட்சி துப்புரவு தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
Published on

வேலூர்,

வேலூர் ஓல்டு டவுன் தோல் கிடங்கு தெருவை சேர்ந்தவர் மோசக். இவருடைய மகன் பீட்டர் (வயது 22). வேலூர் மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

தினமும் மது குடித்துவிட்டு வந்ததால் அவரை, தந்தை மோசக் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பீட்டர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

அதன்படி நேற்று முன்தினம் வீட்டில் உள்ள குளியல் அறைக்கு சென்ற அவர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் வலிதாங்க முடியாமல் அலறினார். உடனடியாக அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் மோசக் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com