விஷம் குடித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை - குடும்ப தகராறில் விபரீத முடிவு

கல்பாக்கம் அருகே குடும்ப தகராறில் ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விஷம் குடித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை - குடும்ப தகராறில் விபரீத முடிவு
Published on

கல்பாக்கம்,

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த கோட்டைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜீ (வயது 32). ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். கடந்த சில தினங்களாக ராஜீ வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால் வீட்டில் வருமானம் குறைந்ததால் கணவன், மனைவிக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் கணவன், மனைவிக்கும் இடையே மீண்டும் ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக மனமுடைந்த ராஜீ ஏற்கனவே வீட்டில் வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்துள்ளார்.

இதனால், வாயில் நுரை தள்ளிய நிலையில் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சதுரங்கப்பட்டினம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com