கடையம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை

கடையம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
கடையம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை
Published on

கடையம்,

கடையம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

கொத்தனார்

நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கீழகுத்தபாஞ்சான் நடுத்தெருவை சேர்ந்தவர் பாபநாசம் மகன் கணேசமூர்த்தி (வயது 23). இவர் கேரளாவில் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவர் சம்பவத்தன்று கேரளாவில் இருந்து வீட்டிற்கு வந்தார்.

அப்போது அவர் மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. அதை அவரது தந்தை பாபநாசம் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த கணேசமூர்த்தி மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கினார். அதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

சாவு

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கணேசமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com