மோட்டார் சைக்கிள் திருடிய டிரைவர் கைது

முனியந்தாங்கல் கிராமத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய டிரைவர் கைது
மோட்டார் சைக்கிள் திருடிய டிரைவர் கைது
Published on

கண்ணமங்கலம்,

சந்தவாசல் அருகே உள்ள முனியந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் மார்கு (வயது 40), செங்கல் சூளை அதிபர். இவர், நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளை வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு தூங்கி விட்டார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது, வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. யாரோ திருடிச்சென்றிருப்பது தெரிய வந்தது. இதுபற்றி அவர், சந்தவாசல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை முனியந்தாங்கல் அருகே சந்தவாசல் போலீசார் தீவிர வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போளூர் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரித்தனர். அவர், சென்னை விருகம்பாக்கம் காந்திநகர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த லாரி டிரைவர் தணிகாசலம் (45) என்பது தெரிய வந்தது. சம்பவத்தன்று இவர், சென்னையில் இருந்து கன்னிகாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது உறவினர்கள் யாரும் வீட்டில் இல்லாததால், அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டார். கன்னிகாபுரத்தில் இருந்து நடந்து வரும்போது, வழியில் குமாரின் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றதாக கூறினார். அந்த மோட்டார் சைக்கிளில் நேற்று போளூர் பகுதியில் இருந்து சென்னைக்குப் புறப்பட்டு வந்து கொண்டிருந்தபோது வாகனச்சோதனையில் போலீசாரிடம் சிக்கிக்கொண்டார். இதையடுத்து தணிகாசலத்தைப் போலீசார் கைது செய்து போளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com