அச்சரப்பாக்கம் அருகே கிணற்றில் மூழ்கி டிரைவர் சாவு

அச்சரப்பாக்கம் அருகே கிணற்றில் மூழ்கி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
அச்சரப்பாக்கம் அருகே கிணற்றில் மூழ்கி டிரைவர் சாவு
Published on

டிரைவர்

சென்னை நுங்கம்பாக்கம், காமராஜர் புரத்தை சேர்ந்தவர் டில்லிபாபு (வயது 38). டிரைவர். இவர் செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே உள்ள திருமுக்காடு கிராமத்தில் உள்ள தன்னுடைய சகோதரி புஷ்பலதா வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு சென்றார். நேற்று பிற்பகல் டில்லிபாபு சகோதரி வீட்டில் சாப்பிட்டு விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் டில்லிபாபுவை தேடினர்.

பிணமாக கிடந்தார்

அவர் அங்குள்ள கிணற்றில் பிணமாக கிடந்தார். இதையடுத்து அச்சரப்பாக்கம் போலீசார் டில்லி பாபுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக டில்லிபாபுவின் சகோதரி புஷ்பலதா அளித்த புகாரின் பேரில் அச்சரப்பாக்கம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தேவதாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com