ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

ஆற்றில் மூழ்கி வாலிபர் பலியானார்.
ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி
Published on

கிருஷ்ணராயபுரம்,

கிருஷ்ணராயபுரம் கல்லுமடை பெருமாள்பட்டி காலனியை சேர்ந்தவர் ரவி (வயது 27). இவர் கரூர் கொசுவலை கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர், நேற்று தனது நண்பர்களுடன் மாயனூர் சுற்றுலா தளத்திற்கு வந்தார். பின்னர் மாயனூர் கதவணை மேல்புறம் காவிரி ஆற்றில் இறங்கினார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் ரவி தண்ணீரில் மூழ்க தொடங்கினார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் ரவியை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை. சிறிது நேரத்தில் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com