

பெங்களூரு,
மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து, குறிப்பிட்ட முகவரியில் உள்ள ஓட்டல் அருகே போலீசார் சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது, ஒரு பெண் உள்பட 2 பேர் போதைப்பொருள் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், அவர்கள் ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த பெண்ணான மனுஇலா ரிட்ல் (வயது 24) என்பதும், பெங்களூரு கே.ஆர்.புரம் அருகே உள்ள டி.சி.பாளையாவில் வசித்து வரும் வர்க்கீஸ் (22) என்பதும் தெரியவந்தது. கைதானவர்களிடம் இருந்த போதைப்பொருட்கள், ஒரு மடிக்கணினி, 3 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.