மாதவரத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை காதல் தோல்வியால் விபரீத முடிவு

மாதவரத்தில் காதல் தோல்வியால் மனமுடைந்த கல்லூரி மாணவி ஒருவர், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாதவரத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை காதல் தோல்வியால் விபரீத முடிவு
Published on

செங்குன்றம்,

சென்னை அடுத்த மாதவரம் பஜார் 2-வது தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் நிர்மலா (வயது 19). இவர் மாதவரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது தாயார் செல்வி. இவர் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சமையலராக வேலை செய்து வருகிறார்.

இந்தநிலையில் செல்வி நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த நிர்மலா சோகமாக காணப்பட்ட நிலையில், திடீரென மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தாய் செல்வி வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மகள் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர், இதுகுறித்து மாதவரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையறிந்த இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், நிர்மலா காதல் தோல்வியால் மனமுடைந்து இருந்து வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com