

நாகர்கோவில்,
குமரி மாவட்ட இந்து கோவில் கூட்டமைப்பு செயலாளர் நாஞ்சில் ராஜா மற்றும் நிர்வாகிகள் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், குமரி மாவட்டத்தில் வருகிற 24ந்தேதி மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பக்தர்கள் 12 சிவன் கோவில்களுக்கும் ஓடி தரிசனம் செய்வார்கள். இந்த பக்தர்களுக்கு பொன்மலை கோவிலிலும், திருநட்டாலம் கோவிலிலும் இளநீர் மற்றும் பழம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த நடவடிக்கையை தமிழக அரசு இந்த ஆண்டு முடக்கி வைத்துள்ளது. எனவே சிவாலய ஓட்டம் செல்லும் பக்தர்களுக்கு இளநீர், பழம் வழக்கம்போல வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சிவாலய ஓட்டத்தின்போது போதிய குடிநீர், மின்சாரவசதி, போக்குவரத்து வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.