நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 25 காசுகள் சரிவு 405 காசுகளாக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 25 காசுகள் சரிவு 405 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 25 காசுகள் சரிவு 405 காசுகளாக நிர்ணயம்
Published on

நாமக்கல்:

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 25 காசுகள் சரிவடைந்து, 405 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

முட்டை விலை சரிவு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 430 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை அதிரடியாக 25 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 405 காசுகளாக சரிவடைந்து உள்ளது.

பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:-

சென்னை-440, ஐதராபாத்-360, விஜயவாடா-375, மைசூரு-415, மும்பை-435, பெங்களூரு-415, கொல்கத்தா-440, டெல்லி-380

கறிக்கோழி

கறிக்கோழி கிலோ ரூ.108-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.6 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.114 ஆக அதிகரித்து உள்ளது. முட்டைக்கோழி கிலோ ரூ.65-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.பிற மண்டலங்களில் முட்டை கொள்முதல் விலை சரிவடைந்து வருவதால், அதற்கு தகுந்தாற்போல் நாமக்கல் மண்டலத்திலும் முட்டையின் கொள்முதல் விலை குறைக்கப்பட்டு இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com