நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 30 காசுகள் குறைந்தது 380 காசுகளாக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 30 காசுகள் குறைந்தது 380 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 30 காசுகள் குறைந்தது 380 காசுகளாக நிர்ணயம்
Published on

நாமக்கல்:

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 410 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையை 30 காசுகள் குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி முட்டை கொள்முதல் விலை 380 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.

இதனிடையே கோடைகாலம் என்பதால் நாளுக்கு நாள் முட்டை விற்பனை குறைவதோடு, அதன் விலையும் குறைந்து வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர். மேலும் கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.106 ஆகவும், முட்டைக்கோழி விலை கிலோவுக்கு ரூ.75 ஆகவும் இருந்து வந்தது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com