நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 25 காசுகள் உயர்வு 415 காசுகளாக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 25 காசுகள் உயர்வு 415 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 25 காசுகள் உயர்வு 415 காசுகளாக நிர்ணயம்
Published on

நாமக்கல்:

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 390 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை 25 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை விலை 415 காசுகளாக அதிகரித்துள்ளது.

பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:-

சென்னை-460, ஐதராபாத்-411, விஜயவாடா-405, மைசூரு-420, மும்பை-445, பெங்களூரு-415, கொல்கத்தா-485, டெல்லி-400.

முட்டைக்கோழி கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.10 உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.90 ஆக அதிகரித்து உள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.130-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

பிற மண்டலங்களில் முட்டை கொள்முதல் விலை உயர்ந்து வருவதால், அதற்கு தகுந்தாற்போல் நாமக்கல் மண்டலத்திலும் முட்டையின் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com